நடிகர் தனுஷ் இந்திய திரையுலகை தாண்டி தற்போது ஹாலிவுட்டில் காலம் இறங்க உள்ளார். அறிமுகமான படத்தில் மிக பெரிய கேலியும், கிண்டலும், அவுமானமும் பட்ட அவர் இன்று இந்திய சினிமா உலகிற்கே பெருமை சேர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செல்வராகவனிடம் நடிப்பை கற்று கொண்ட தனுஷ் இப்பொது தனக்கென அழியாத ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி உள்ளார். ஹிந்தியில் கடைசியாக “அத்ராங்கி டே” படத்தில் கலக்கிருந்தார்.
இப்பொது உலகின் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படமான “அவென்ஜ்ர்ஸ்: எண்ட்கேம்” படத்தின் இயக்குனர்களான ரூஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கம் படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவென்ஜ்ர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் கிரிஸ் எவன்ஸ் நடிப்பில் அவருடன் ரயன் கோஸ்லிங், அனா டீ அர்னாஸ் என 3 பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

நெட்பிளீக்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறைவான திரை அரங்குகளிலேயே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. ஒரே வாரம் அதாவது ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளிலும், ஜூலை 22ஆம் தேதி நெட்பிளீக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது.
பயங்கர ஆக்ஷன் சண்டை கலந்த துப்பறிவு கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. தி க்ரே மேன் என்ற பெயரில் வெளியான நாவலை அடிப்படியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நம்மவர் தனுஷ் நடித்திருப்பதாலேயே இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பரப்பு உள்ளது. பெரிய ஹீரோக்களை தற்போது தமிழை தாண்டி படம் நடிப்பதில்லை என்ற குறிக்கோளை கொண்டுள்ளதால், நம் மொழி நடிகர்களை பெருமபாலும் தமிழில் மட்டுமே பார்க்க முடிகிறது. நடிகர் தனுஷ் கொஞ்சம் வேறுப்பட்டு அவ்வப்போது வரும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
இப்பொது நடிகர் விஜய் சேதுபதியும் கொஞ்சம் இந்த பாணியை கொண்டுள்ளார். இவரும் ஹிந்தியில் விரைவில் அறிமுகமாக உள்ளார். இதனால் இங்கிருந்து சென்ற ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக நடிப்பதே நம்முடைய ரசிகர்களுக்கும், திரையுலகிற்கு பெருமை தான்.
Video Courtesy – Netflix