விக்ரம் படத்திலிருந்து wasted lyric என்ற பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள “விக்ரம்”திரைப்படம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார். வீடியோ சாங் கீழே உள்ளது

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆண்டவர் போட்ட குத்து சாங் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Sony Music South

படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிம்பு, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் பத்தல பத்தல பாடலும், போர்கொண்ட சிங்கம் என்ற பாடலின் Lyric வீடியோ வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது wasted lyric என்ற பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஆங்கில வரிகளை கொண்டு அனிருத் இசையில் மாஸ் காட்டியுள்ளது அந்த பாடல். அந்த பாடலை நீங்களும் காண..Watch the video below…