குத் வித் கோமாளியில் முதல் பைனலிஸ்ட்..நீங்க காட்டற அன்புக்கு ரொம்ப நன்றி.. எமோஷனல் ஆக பேசிய ஸ்ருதிகா

குத் வித் கோமாளியில் தான் முதல் பைனலிஸ்ட் ஆக வந்ததிற்கு தனது ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமாக இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிகா. குத் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளவர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். முதல் படமே தமிழில் சூர்யாவுடன் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படமே தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் மனம் தளராமல் நளதமயந்தி, ஆல்பம், தித்திக்குதே படங்களில் நடித்தார். இந்த படங்களும் தொடர் தோல்வியை சந்திக்கவே திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார். ஆனால் இவர் நடித்த செல்லமே செல்லம் என்றாயடா பாடல் இன்றளவும் பிரபலமானது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஸ்ருதிகாவிற்கு சின்னத்திரையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குத் வித் கோமாளியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.

குத் வித் கோமாளியில் முதல் பைனலிஸ்ட்..நீங்க காட்டற அன்புக்கு ரொம்ப நன்றி.. எமோஷனல் ஆக பேசிய ஸ்ருதிகா 1

விளம்பரம்

தான் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விதான் என்று பல பேட்டிகளில் அவரே சொல்லி சிரிப்பார். குத் வித் கோமாளிக்கு வந்த பிறகு ஸ்ருதிகாவின் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அவரின் வெள்ளந்தியான பேச்சும், சிரிப்பும், குரேஷியுடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடிகள் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இவரின் கணவர் அர்ஜூன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு லைவ்வில் வந்த அவரிடம் காதல் கதை குறித்து ரசிகர்கள் கேட்டனர். அர்ஜூனை முதன்முதலில் ஃபேஸ்புக்கில்தான் பார்த்தேன். முதலில் சோசியல் மீடியாவில் அர்ஜூன் request கொடுத்ததால் அவரை கெட்டவர் என நினைத்தேன். பின்னர் அவருடன் பழகிய பின்புதான் அவர் நல்லவர் என தெரிந்தது எனக் கூறினார்.

தொடர்புடையவை  சுனிதாவுடன் செம்ம cute ஆக ரொமான்ஸ் செய்த சந்தோஷ் பிரதாப்.! எவ்ளோ அழகா இருக்காங்க ரெண்டு பேரும்

குத் வித் கோமாளியில் முதல் பைனலிஸ்ட்..நீங்க காட்டற அன்புக்கு ரொம்ப நன்றி.. எமோஷனல் ஆக பேசிய ஸ்ருதிகா 3

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளியில் கலக்கி வருகிறார் ஸ்ருதிகா. தற்போது முதல் பைனலிஸ்ட் ஆக வந்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இதனால் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos

விளம்பரம்

Leave a Comment