
தமிழில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் “ராஜா ராணி”. ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளியான இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர் நண்பன், எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் முதல் படத்தை இயக்கி வெற்றியை கண்டவர்.

தொடர் வெற்றி படங்கள் விஜய்க்கு கொடுத்து, அவருடைய ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து போன இயக்குனராக மாறி போனார். மீண்டும் ஹாட்ரிக் வெற்றியை குறி வைத்து சன் பிக்சரஸ் நிறுவனத்துடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, அம்ரிதா ஐயர், இந்துஜா என பலர் நடிக்க வெளியான இந்த “பிகில்” படம் விமர்சனகர்களிடம் இது பயங்கர காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்று விமர்சிக்க பட்டாலும் மீண்டும் விஜயுடைய அதிக காலெக்ஷன் செய்த படமாக இது உருவெடுத்து. கிட்டத்தட்ட 300 கோடி வசூலை இம்முறை வாரி குவித்தது இந்த படம்.

இப்பொது பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஜவான் படத்தில் பணிபுரிந்து வருகிறார். எவ்ளோ விமர்சனனால் வைக்கப்பட்டாலும் இன்று இந்திய அளவில் மிக முக்கிய நடிகரை கொண்டு மிக முக்கிய படத்தை எடுத்து வருகிறார் அட்லீ. அந்த படத்தின் டீஸர் வெளியாகி தமிழில் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Video Courtesy – Red Chillies Entertainment
அட்லீயை போலவே முதல் படம் முதலே வெற்றி பெற்று வரும் இயக்குனர் லோகேஷ்.மாநகரம் படத்தில் பெரிதும் பரிட்சயம் மற்றவர்கள் இருந்தாலும், படம் நல்ல விமர்சனமும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கைதி, அட்லீ விஜய்யின் “பிகில்” படத்துடன் வெளியாகி 100 கோடி வசூல் மட்டுமின்றி நடிகர் கார்த்தியின் மிக பெரிய வெற்றி படமாகவும் இது மாறியது.

அடுத்த நடிகர் விஜயுடன் “மாஸ்டர்”. கொரோனா காலகட்ட சிக்கலில் சிக்கி இருந்த தமிழ் சினிமா ஒட்டுமொத்தமும் எதிர்பார்த்த படம் இது. பெரிய எதிர்பார்ப்பை மிக கனகச்சிதமாக பூர்த்தி செய்து, 50% கூட்டத்துடனே படம் 200 கோடியை அசால்ட்டாக தாண்டியது. இப்பொது விக்ரம் தமிழ் சினிமாவின் உச்ச வசூல் எடுத்துள்ள படம். இதனை அடுத்து தென்னிந்திய மட்டுமின்றி இந்திய அளவில் முக்கியத்துவம் கொண்ட இயக்குனராக லோகேஷ் உள்ளார்.

அடுத்து மீண்டும் விஜயுடன் இணையவுள்ள இவரை, சமீப காலமாக தவித்து வரும் பாலிவுட் உலகம் கைப்பற்ற போராடி வருகிறது. நடிகர் சல்மான் கான் ஏற்கனவே இயக்குனர் லோகேஷுடன் இணையவுள்ளதாகவும், அதில் முதற்க்கட்ட பேச்சுவார்த்தை சிறப்பாகவே முடிந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. கைதி 2, விக்ரம் 3, விஜயின் படம் என அடுத்தடுத்து பிஸியாக உள்ள லோகேஷ் பாலிவுட் சென்றால் அங்கும் மிக பெரிய வெற்றியை பதிவு செய்வார் என்பதில் மாற்று கருத்தில்லை.
