ஸ்ருதியின் DNA டெஸ்டை ருக்மணியிடம் குடுக்க போன சொர்ணம்.! பயந்து அலறிய விஸ்வநாதன்.!

மௌனராகம் சீரியலில் ஸ்ருதியின் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு காதம்பரியின் வீட்டிற்கு சக்தியின் அத்தை சொர்ணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் விஸ்வநாதனையும் காதம்பரியின் தாய் ருக்மணியையும் மிரட்டுகிறார். இதை மாடியில் இருந்து ஷீலா பார்த்து விடுகிறார். மௌனராகம் சீரியலில் தற்போது சக்தியின் தாய் மல்லிகாவை காதம்பரியின்அப்பா விஸ்வநாதன் கடத்தி வைத்திருக்கிறார். மல்லிகாவும் காதம்பரியும் கார்த்திக்கின் இரண்டு மனைவிகள் ஆவார். மல்லிகாவின் மகள் சக்தி, காதம்பரியின் மகள் ஸ்ருதி. ஆனால் ஸ்ருதி கதைப்படி காதம்பரிக்கும் அவரது காதலருக்கும் பிறந்தவர். இதை மறைத்து காதம்பரியை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். மல்லிகா இறந்துவிட்டார் என நினைத்து காதம்பரியை இரண்டாவதாக திருமணம் செய்து இருப்பார் கார்த்திக். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

ஸ்ருதியின் DNA டெஸ்டை ருக்மணியிடம் குடுக்க போன சொர்ணம்.! பயந்து அலறிய விஸ்வநாதன்.! 1

விளம்பரம்

பின்னர் மல்லிகாவும் அவரது மகள் சக்தியும் எப்படியோ கார்த்திக்கை தேடி சென்னைக்கு வந்து விடுவார். அன்று தொடங்கி அவர்களுக்கும் காதம்பரி குடும்பத்திற்கும் பிரச்சனை நீடித்து வருகிறது. மல்லிகா மற்றும் சக்தியை எப்படியாவது கார்த்திக்கின் வாழ்க்கையில் இருந்து விரட்டி விட வேண்டும் என்று காதம்பரி அவரது தாய் ருக்மணி அவரது தந்தை விஸ்வநாதன் தொடர்ந்து சதி செய்து வருகின்றனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. சக்தி வருண் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவரது தம்பி தருணை ஸ்ருதி திருமணம் செய்து கொண்டார். சக்தியும், ஸ்ருதியும் ஒரே வீட்டில் மருமகள்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அடுத்த திருப்பமாக மல்லிகாவை விஸ்வநாதன் கடத்தி வைத்திருக்கிறார்.

தொடர்புடையவை  இதுவரை பலரும் பார்த்திடாத இயக்குனர் ஆர். சுந்தர்ராஜனின் குடும்ப புகைப்படங்கள்.!

ஸ்ருதியின் DNA டெஸ்டை ருக்மணியிடம் குடுக்க போன சொர்ணம்.! பயந்து அலறிய விஸ்வநாதன்.! 3

விளம்பரம்

கார்த்திக்கின் பிறந்தநாள் கச்சேரியில் மல்லிகாவும் கார்த்தியும் இணைந்து பாட இருப்பதாக கிடைத்த செய்தியை தொடர்ந்து மல்லிகாவை கடத்தி வைத்திருக்கிறார் காதம்பரியின் தந்தை விஸ்வநாதன். இதை கண்டுபிடிப்பதற்காக சக்தியின் அத்தை சொர்ணம் தற்போது களத்தில் இறங்கி இருக்கிறார். அவர் ஸ்ருதியின் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்டை ஒருமுறை கார்த்திக்கு அறையிலிருந்து எடுத்து அதை ஜெராக்ஸ் காப்பி போட்டு வைத்திருக்கிறார். தற்போது விஸ்வநாதன் வீட்டிற்கு செல்லும் சொர்ணம் நீங்கள் மல்லிகா இருக்கும் இடத்தை காண்பிக்காவிட்டால் இந்த ரிப்போர்ட்டை தொலைக்காட்சிகள், மனோகர் வீடு என எல்லா இடத்திலும் சென்று கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அப்போது அங்கு வரும் ருக்மணியையும் அவர் மிரட்டுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் விஸ்வநாதனுக்கு சரியான ஆள் சொர்ணம் தான் என்று பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment