காதல் மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு முன்பு நின்று செம்ம ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.! இதோ Photos..!

ஜெயம் ரவி தன் மனைவியுடன் தாஜ் மஹாலுக்கு முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜெயம் ரவியின் மனைவி தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. தமிழில் 2002ம் ஆண்டு வெளியான ஜெயம் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரவி. இவரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் சினிமா துறையைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

காதல் மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு முன்பு நின்று செம்ம ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.! இதோ Photos..! 1

விளம்பரம்

42 வயதாகும் ஜெயம் ரவி முதலில் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2003 ஆம் ஆண்டு அவர் ஜெயம் என்கிற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் அடித்து வைத்தார். அதன் பின்னர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தில்லாலங்க,டி எங்கேயும் காதல், கோமாளி, அடங்கமறு போன்ற பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

தொடர்புடையவை  காயத்ரி ரகுராம் குஷ்புவுடன் மோதலா!

காதல் மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு முன்பு நின்று செம்ம ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.! இதோ Photos..! 3
அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அருள்மொழிவர்மன் என்கிற ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. தற்போது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இறைவன், அகிலன், சைரன் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

விளம்பரம்

காதல் மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு முன்பு நின்று செம்ம ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.! இதோ Photos..! 5

திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் 25க்கும் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. நல்ல கதையம்சத்துடன் கூடிய கதைகளில் மட்டுமே நடித்து வருவதால் ஜெயம் ரவிக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு 2009 ஆம் ஆண்டு திருமணமானது. ஆர்த்தி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகன் பெயர் ஆரவ், இரண்டாவது மகன் பெயர் அயான். இதில் ஆரவ் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தாத்தா எங்களையும், அம்மாவையும் ஆசீர்வாதம் பண்ணுங்க.! ரஜினி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பேரன்கள்.!

காதல் மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு முன்பு நின்று செம்ம ரொமான்ஸ் செய்யும் ஜெயம் ரவி.! இதோ Photos..! 7

அழகான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜெயம் ரவி தற்போது தாஜ்மஹாலில் தனது மனைவியுடன் செம்ம ரொமான்டிக் ஆக புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த அழகான நினைவுகளுடன் காதல் மாதத்தை முடிக்கிறோம் என்று சொல்லி அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். லைக்குகளும் குவிந்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment