ஆலியாவுடன் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கிய ஐலா குட்டி.! மேக்கப் போடுற அழகை பாருங்க.!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் குடும்பத்துடன் ஒரு விளம்பர படத்தில் நடித்திருக்கின்றனர். விரைவில் அந்த விளம்பர படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளி திரையில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சஞ்சீவ். ராஜா ராணி என்கிற சீரியலின் முதன் முதலாக நடித்தார் .பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்கிற சீரியலில் நடித்தார். ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது உடன் பணியாற்றிய ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆலியா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை கரம் பிடித்து தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த தம்பதிகளுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலியாவுடன் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கிய ஐலா குட்டி.! மேக்கப் போடுற அழகை பாருங்க.! 1

விளம்பரம்

தற்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்கிற சீரியலில் நடித்து வருகிறார். ஆலியாவும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆலியாவும் சஞ்சீவும் மக்கள் விரும்பும் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் தங்கள் செய்யும் Vlog வீடியோக்கள், டூர் வீடியோக்கள், சமையல் வீடியோக்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்காக சஞ்சீவ் & ஆலியா என்கிற youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர் இந்த சேனலில் ஆலியாவின் மகள் ஐலா செய்யும் சேட்டைகளையும் தற்போது அர்ஷ் குட்டி செய்யும் சேட்டைகளையும் வீடியோக்களாக எடுத்து பகிர்ந்து வருகின்றனர் மேலும் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் பர்சேஸ் செய்வது, இரவு நேர டின்னர் பார்ட்டி வைப்பது, கேக் வெட்டுவது போன்ற பல நிகழ்ச்சிகளையும் அவர்கள் தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடையவை  6 வருடங்களுக்கு பிறகு பிறந்த மகன்.! புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்த பாண்டவர் இல்லம் அனு.!

ஆலியாவுடன் விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கிய ஐலா குட்டி.! மேக்கப் போடுற அழகை பாருங்க.! 3
இந்த நிலையில் இன்று அவர்கள் ஒரு புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றி இருக்கிறார்கள். அதில் ஆலியா மானசா அவரது கணவர் சஞ்சீவ், பிள்ளைகள் அர்ஷ் மற்றும் ஐலா ஆகிய அனைவரும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படத்திற்காக சூட்டிங்கில் நடித்துள்ளனர். அந்த வீடியோவை அவர்களது சமூக வலைதள பகுதியில் பகிர்ந்திருந்தனர் அந்த வீடியோவிற்கு தற்போது பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sanjiev & Alya

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment