அய்யயோ என்ன சுடுறாங்களே.! தூக்கத்தில் பயந்து அலறிய ஆதி குணசேகரன்.! செம்ம காமெடியான Promo.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் ஜீவானந்தம் துப்பாக்கியால் சுட்டதை நினைத்து இரவில் பயந்து அலறும் ஆதி குணசேகரன் தற்போது நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சி ரசிகர்கள் மட்டுமல்லாது சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சீரியலாக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் இந்த சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது.

அய்யயோ என்ன சுடுறாங்களே.! தூக்கத்தில் பயந்து அலறிய ஆதி குணசேகரன்.! செம்ம காமெடியான Promo.! 1

விளம்பரம்

ஆதி குணசேகரனின் அப்பத்தாவாக இருக்கும் பட்டம்மாளின் 40% பங்குகள் யாருக்கு சேர போகிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அது ஜீவானந்தம் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. வீடு உட்பட பட்டமாளின் 40% பங்குகள் எந்தெந்த சொத்துக்களில் எல்லாம் இருக்கிறதோ அந்தந்த சொத்துக்களை எல்லாம் தற்போது ஜீவானந்தம் தனது பெயருக்கு மாற்றி இருக்கிறார். இந்த செய்தியை கேட்டு தற்போது ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் அனைவரும் நிலைகுலைந்து போயிருக்கின்றனர். மேலும் சொத்துக்களை அபகரித்த ஜீவானந்தத்திடம் நீதி கேட்க போன ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகளை குண்டு கட்டாக தூக்கி வெளியில் எறிந்துவிட்டனர். இப்படியாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடையவை  அரசு பேருந்தில் ஏறி கம்பியை பிடிக்காமல் கீழே விழ போன மணிமேகலை..செம்ம காமெடி | Manimegalai

கோமா நிலையில் இருக்கும் அப்பத்தா அவ்வப்போது கண்விழித்து ஜீவானந்தத்தை போய் பார் என்று ஜனனியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் ஜீவானந்தம் அப்பத்தாவிற்கு தெரிந்த ஆளாக இருக்குமா? ஜீவானந்தம் யார்? அவர் ஏன் இந்த சொத்தை பறித்துக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வி தற்போது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

விளம்பரம்

அய்யயோ என்ன சுடுறாங்களே.! தூக்கத்தில் பயந்து அலறிய ஆதி குணசேகரன்.! செம்ம காமெடியான Promo.! 3

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கம்பெனியை பறித்துக் கொண்ட ஜீவானந்தத்திடம் நீதி கேட்டு ஆதி குணசேகரன் சென்ற போது அவர் துப்பாக்கியை எடுத்து மிரட்டி இருந்தார். இது ஆதி குணசேகரனின் நினைவில் வந்து வந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த ப்ரோமோவில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் ஆதி குணசேகரனுக்கு துப்பாக்கியால் சுட்டது போன்ற கனவு வருகிறது. இதனால் நள்ளிரவில் அலறி அடித்துக் கொண்டு எழுகிறார் ஆதி குணசேகரன்.

விளம்பரம்

ஆதி குணசேகரனின் அலறலைக் கேட்டு அனைவரும் அங்கு ஓடி வர கதிர் ஆதி குணசேகரனை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்போது நந்தினி எங்களிடம் தான் இந்த வாய் வீராப்பெல்லாம் ஆனால் அங்கு போய் அடி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கிண்டலாக சொல்ல, பின்னர் ஆதி குணசேகரன் இறந்தவர் வீட்டில் பாடும் ஒப்பாரி போல ஒப்பாரி பாடலைப் பாடி அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது காமெடியாக வெளியாகி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் தற்போது இந்த ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது..!

தொடர்புடையவை  வேஷ்டி சட்டையுடன் செம்ம கெத்தாக ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் பார்க்க சென்ற புகழ்.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment