விசித்ராவை கட்டிப்பிடித்து அழும் பெண் போட்டியாளர்கள்.! ரட்சிதா பிரிவு பற்றி பேசிய தினேஷ்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘பூகம்பம்’ டாஸ்கின் இரண்டாவது பகுதி வைக்கப்பட்டுள்ளது. பூகம்பம் டாஸ்க்குகள் மொத்தம் மூன்று என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது டாஸ்க் நடந்து முடிந்துள்ளது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பு முனைகளுடன் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அதன் பின்பு 5 போட்டியாளர்கள் என மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர் இந்த வாரமும் எட்டு பேர் நாமினேஷனில் சிக்கிய நிலையில் பிக் பாஸ் அடுத்த அதிரடியை தொடங்கியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசித்ராவை கட்டிப்பிடித்து அழும் பெண் போட்டியாளர்கள்.! ரட்சிதா பிரிவு பற்றி பேசிய தினேஷ்.! 1

விளம்பரம்

அதில் ‘பூகம்பம்’ என்கிற தலைப்பில் மூன்று போட்டிகள் வைக்கப்படும், அந்த மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 14 பேரும் இந்த வீட்டில் நீடிக்க முடியும், இல்லை என்றால் அவர்களில் இருந்து மூன்று பேர் வெளியேற்றப்பட்டு, எலிமினேட் ஆகி சென்ற பழைய போட்டியாளர்கள் மூன்று பேர் உள்ளே வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் எப்படியாவது இந்த போட்டியில் ஜெயித்து எலிமினேட் ஆகி சென்ற நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது என்று திட்டம் தீட்டி இருக்கின்றனர். அதில் பந்தை வைத்து விளையாடுவது போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  அந்த பொம்பள பொ று க்கிய முதல்ல வெளிய அனுப்புங்க.! அசல் கோளாறுக்கு எதிராக கொந்தளித்த நெட்டிசன்கள்

விசித்ராவை கட்டிப்பிடித்து அழும் பெண் போட்டியாளர்கள்.! ரட்சிதா பிரிவு பற்றி பேசிய தினேஷ்.! 3
ஆனால் அதை போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் தங்களுக்கு நிகழ்ந்த சோகமான கதை ஒன்றை கூற வேண்டும், அது மற்ற போட்டியாளர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே இதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விசித்ராவின் கதையை கேட்ட அனைவரும் எழுந்து அவரை கட்டிப்பிடித்து அழுகின்றனர். அதேபோல மாயா, தினேஷ் ஆகியோர் தங்களின் சோகப் பக்கங்களை கூறுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment