கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தற்போது அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறிய நிலையில், இன்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை அவரது தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. “இன்னும் 14 நாட்கள் அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது, கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீராக இல்லை, நுரையீரலுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது” என்று அறிக்கை வெளியானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சில நிமிடங்களுக்கு பின்னர் விஜயகாந்த்க்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விட்டதாகவும் ட்ரக்கியூஸ்டமி என்று கூறப்படும் தொண்டை வழியாக நுரையீரலுக்கு குழாய் செலுத்தி அதன் வழியாக ஆக்சிஜன் செலுத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜய்காந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “காலையில் வெளியான மருத்துவ அறிக்கை சாதாரண மருத்துவ அறிக்கை தானே தவிர பதட்டப்படும் வகையில் எந்த விஷயமும் அதில் இல்லை. எனவே தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கேப்டன் மிக நலமாக இருக்கிறார். அவரை நான் அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறேன்.

மருத்துவமனை நிர்வாகமும் அவருக்கு சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம். தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கேப்டன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் கேப்டன் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது பிரார்த்தனைகளை முன் வைத்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O