விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 இன்றுடன் 87 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த சீசனில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் நிக்சன் இன்றைக்கு நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளுடன் தற்போது முன்னணியில் இருக்கிறார். ஆனால் இதற்கு காரணம் விஜய் வர்மா தான் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. விஜயவர்மா செய்த வேலையால்தான் நிக்சனால் வெற்றி பெற முடிந்தது என்று சொல்லி ரசிகர்கள் விஜய் வர்மாவை வீடியோ ஆதாரங்களைப் பகிர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர்.
Did #VijayVarma "left side 2" ??
Shocking 😳😳😳😳#Nixen took the same card
Hmm..
Ithuku ethuku game? #Vishnu #Mani #Dinesh well done guys 👏👏. Better sitting outside is more fun than anything.. #BiggBoss7Tamil#BiggBossTamil7 pic.twitter.com/YhgS562Ebm
— BB Mama (@SriniMama1) December 27, 2023
#VijayVarma shaken his thumb
finger For #Nixen Watch clearly 🤦Nethu #Vishnu win pannathu unfair game sonnagroup enga pa
Ipdi win pandraku pannamae
irukalam da …Your thoughts about Nixen winning?#BiggBossTamil7 #BiggBoss7Tamil #BiggBossTamilpic.twitter.com/eeQqNY7f9h
— Sekar 𝕏 (@itzSekar) December 27, 2023
முந்தைய சீசன்களில் எல்லாம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் மிகக் கடுமையாக இருக்கும். இரவு பகலாக அமர்ந்திருப்பது சொர்க்கம், நரகம், காட்டுவாசி, அரண்மனை என பல விறுவிறுப்பான டாஸ்க்குகள் நடக்கும். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே இல்லாமல் இந்த சீசன் முடிய இருக்கிறது. இன்னும் 13 நாட்களே மீதம் இருக்கும் நிலையில் சுவாரஸ்யமோ, உடல் உழைப்போ இல்லாமல் போட்டியாளர்கள் சாப்பிட்டு, தூங்கி எழுந்து விளையாட்டை விளையாடிவிட்டு செல்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் கூட அப்படித்தான் நடக்கிறது. ‘முயல்’ என்று சொல்லி இன்று ஒரு புது டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.
I see two different versions of the same video. In this version
" Left Side Two" Audio is not there.Which one is true? Let's wait for the episode to stream then decide.
pic.twitter.com/c5lCTNoBhL#BiggBossTamil7 #BiggBossTamil— Akshay (@Filmophile_Man) December 27, 2023
Here The Full Video Of #VijayVarma Shuffling Cards Fully From Down To Top 😎🔥.
Not Even 1Min He Waited Fully Shuffling the Cards..
Ipa indha Video ku Ena muttu kudukuranga nu Pakalam 🤣#BiggBossTamil #BiggBossTamilSeason7 #BiggBoss7Tamil #BiggBossTamil7 pic.twitter.com/2q4bAvyLxk
— BIGG BOSS FOLLOWER (@BiggBosstwts) December 27, 2023
அதில் கட்டங்களில் வரிசையாக போட்டியாளர்கள் நிற்க வேண்டும். அவர்களுக்கு கார்டுகள் காண்பிக்கப்படும். கார்டை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு அதில் எழுதப்பட்டிருப்பது போல கட்டங்களில் முன்னேற வேண்டும் அல்லது பின்னேற வேண்டும் அல்லது சக போட்டியாளர்களின் கட்டங்களை மாற்ற வேண்டும். இவ்வாறாக டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் நிக்சன் வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு மூன்று புள்ளிகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிக்ஸன் கேவலமாக ஏமாற்றி வெற்றி பெற்றதாக தற்போது நெட்டிசன்கள் வீடியோவை பகிர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா இருவரும் இந்தப் போட்டியின் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.
#VijayVarma Card Shuffle is Clean to #Nixen 🔥
Purinjipochuu .. chumma dan koluthi podrangala ⁉️💥
How the hell will Vijay know which card is the right one ?? I don't understand your logic😅#biggbosstamil7 #biggbosstamilpic.twitter.com/PYPVSJZk0n
— Trends Unseen (@TrendsUnseen) December 27, 2023
Goshh..You guys can even lie just to potray someone bad ? Look at this video. #VijayVarma shuffled the cards before giving to #Nixen. How the hell will Vijay know which card is which ?? I don't understand your logic😅 ? #Biggbosstamil7 pic.twitter.com/384SSFOxYB
— Forever_anirudhian (@Anirudhian10) December 27, 2023
இந்த நிலையில் கார்டை கலைத்துவிட்டு நிக்சனிடம் நீட்டும் விஜய் வர்மா தனது பெருவிரலை ஆட்டி நிக்ஷனுக்கு சரியான கார்டை காண்பித்ததாகவும், அந்த கார்டை எடுக்கும் நிக்சன் வெற்றி பெற்றதாகவும் வீடியோ நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும், “இப்படி ஜெயிப்பதற்கு ஜெயிக்காமலே இருக்கலாம்” என்று சொல்லி நிக்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும் விஜய் வர்மாவின் இந்த செயலையும் கண்டித்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ கார்டை நீட்டுவதற்கு முன்பே விஜய் வர்மா கார்களை நன்றாக கலைத்து விடுகிறார். பின்னர் அவருக்கு எப்படி எது சரியான கார்டு? என்பது தெரியும்? எனவே தேவையில்லாமல் வதந்தி பரப்பாதீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.