மெய்யழகன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்..! வெளியிட்ட படக்குழு..!

பருத்திவீரன் படத்தில் நடித்து சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் கார்த்தி. இந்த படத்தில் இவரது நடிப்பு, இதனை இவருக்கு முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவு இருக்கும். அந்த அளவிற்கு தனது நடிப்பினை காண்பித்து அசத்தியிருப்பார். இப்படத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். பல வெற்றிப்படங்களை நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் கொடுத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மெய்யழகன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்..! வெளியிட்ட படக்குழு..! 1

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து முதல் முறையாக நடித்து உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். இவர்களுடன் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மெய்யழகன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்..! வெளியிட்ட படக்குழு..! 3

விளம்பரம்

இப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் படக்குழு படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்கி இருப்பதாக அறிவித்து இருந்தது. இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இந்த காட்சியை படத்தில் வைத்திருக்கலாமே என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  நயன்தாராவை கட்டிப்பிடித்த அனிருத்..ஏஆர் ரகுமான் கையில் முத்தமிட்டு வரவேற்ற விக்னேஷ் சிவன்...இதுவரை வெளியாகாத புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : 2D ENTERTAINMENT

விளம்பரம்

Leave a Comment