மஹா செய்து கொடுத்த டிசைன்.! சூர்யாவுக்கு கிடைத்த வெளிநாட்டு ஆர்டர்.! சிக்கலில் கெளதம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மகா செய்து கொடுத்த டிசைனை பார்த்து சூர்யாவிற்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கிறது. ஆனால் அதை கௌதம் தான் செய்தார் என சித்ரா பொய் சொல்ல, சூர்யா மஹாவையும், கௌதமையும் எதிர் எதிரே அமர வைத்து உடனடியாக டிசைனிங் செய்து கொடுக்குமாறு கூறுகிறார். இதனால் கௌதம் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

மஹா செய்து கொடுத்த டிசைன்.! சூர்யாவுக்கு கிடைத்த வெளிநாட்டு ஆர்டர்.! சிக்கலில் கெளதம்.! 1

விளம்பரம்

‘ஆஹா கல்யாணம்’ தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. அக்காவை தம்பியும், தங்கையை அண்ணனும் திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படியாக கதை தொடங்கிய நிலையில் தற்போது கதை எங்கெங்கோ நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நகைகள் டிசைன் செய்யும் கம்பெனி நடத்தி வரும் சூர்யாவுக்கு வெளிநாட்டு ஆர்டர் ஒன்று கிடைக்கிறது. அப்போது அவர்களுக்கு கௌதம் செய்து கொடுத்த டிசைன் எதுவும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் கோடீஸ்வரி மஹாவை டிசைன் செய்யுமாறு கூற மஹாவும் நகை டிசைன் செய்து வைக்கிறார்.

தொடர்புடையவை  ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போலவே மரண குத்தாட்டம் போட்டுள்ள சித்து ஸ்ரேயா ஜோடி.!

மஹா செய்து கொடுத்த டிசைன்.! சூர்யாவுக்கு கிடைத்த வெளிநாட்டு ஆர்டர்.! சிக்கலில் கெளதம்.! 3

விளம்பரம்

மஹாவின் டிசைனை பார்த்த வெளிநாட்டவர்கள் அதை ஓகே செய்து சூர்யாவுக்கு ஆர்டரை கொடுக்கின்றனர். ஆனால் சித்ராவோ அதை கௌதம் தான் செய்தான் என்று கூற, சூர்யாவுக்கு சந்தேகம் எழுகிறது. இருவரையும் அமர வைத்து டிசைன் செய்ய சொல்லி சூர்யா உத்தரவிடுகிறார். அந்த புரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment