‘மோதலும் காதலும்’ ஹீரோ சமீரின் வீட்டை பார்த்து இருக்கீங்களா. ! அவரே வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ.!

நடிகர்கள் பொதுவாகவே தங்களுடைய வீட்டை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோ போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சின்னத்திரை நடிகர்கள் தற்போது தங்களது மனைவிகளுடன் இணைந்து Couple வீடியோக்களை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதற்காக youtube சேனலையும் தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ‘மோதலும் காதலும்’ சீரியலின் ஹீரோவாக இருக்கும் நடிகர் சமீர் அகமது கோயம்புத்தூரில் இருக்கும் தனது வீட்டைச் சுற்றி காண்பித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'மோதலும் காதலும்' ஹீரோ சமீரின் வீட்டை பார்த்து இருக்கீங்களா. ! அவரே வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ.! 1
கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் சமீர். இவர் மாடலாகவும், பாடி பில்டராகவும் இருந்து வருகிறார். மிஸ்டர் தமிழ்நாடு வேர்ல்ட் வைட் என்கிற போட்டியில் 2019ம் ஆண்டின் வெற்றியாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு முதல் முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘சில்லுனு ஒரு காதல்’ சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்த சீரியல் முடிவடைந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்’ சீரியலில் விக்ரம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீர் அகமதுக்கு பெண் ரசிகைகள் பலரும் இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் மணிமேகலையை கோமாளியாக்கிய நடுவர்கள்.! துள்ளி குதிக்கும் மற்ற கோமாளிகள்.!

'மோதலும் காதலும்' ஹீரோ சமீரின் வீட்டை பார்த்து இருக்கீங்களா. ! அவரே வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ.! 3
சமீருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், தனது மனைவியோடு அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது கோயம்புத்தூரில் வாங்கிய புது வீட்டின் ஹோம் டூர் வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். வீடு சிறியதாக இருந்த போதிலும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Stars Family

விளம்பரம்

Leave a Comment