பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஜனார்த்தனனின் இரண்டாவது மருமகன் பிரசாந்த் ஜனார்த்தனையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறார். இதனால் அவரை கொலை செய்த பழி முதல் மருமகனான ஜீவா மீது விழுகிறது. இதனால் ஜீவாவை கைது செய்து போலீசார் அழைப்பு செய்கின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிக்பாஸ் வரவால் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜனார்த்தனனின் இரண்டாவது மருமகனாக இருக்கும் பிரசாந்துக்கும் அவரது மாமனாருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இருவரும் கத்தியால் கடுமையாக தாக்கிக் கொள்கின்றனர். பின்னர் பிரசாந்த் ஜனார்த்தனையை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறார். பின்பு தனது மாமனார் உடலுக்கு அருகில் இருந்து ஜீவா தான் கத்தியால் குத்தி விட்டதாக சொல்லி நாடகமாடிக் கொண்டிருக்கிறார். இதை நம்பும் போலீசார் நேராக ஜீவாவின் வீட்டிற்கு வருகின்றனர். அவரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். இதனால் மீனா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது.

இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக்பாஸ் வருகையால் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது அதிரடி திருப்பமாக இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television