சேமித்த பணத்தை தோழியின் அம்மாவின் மருத்துவ செலவுக்கு கொடுத்த சிறுமி.! சூப்பர் சிங்கரில் நெகிழ்ச்சி.!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனன்யா என்ற போட்டியாளர் மற்றொரு சிறுமிக்கு செய்த உதவியால் தற்போது நடுவர்கள் உட்பட அரங்கமே நெகிழ்ந்து போயிருக்கிறது. சிறுமியின் செயல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக சித்ரா, இசையமைப்பாளர் தமன், அந்தோணி தாசன் உள்ளிட்டோர் பங்கெடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேமித்த பணத்தை தோழியின் அம்மாவின் மருத்துவ செலவுக்கு கொடுத்த சிறுமி.! சூப்பர் சிங்கரில் நெகிழ்ச்சி.! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தற்போது ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அனன்யா என்ற போட்டியாளர் தனது தோழி விஸ்வரூபிணிக்காக பாடல் ஒன்றை டெடிகேட் செய்வதாக கூறினார். அவள் மனது நிறைய கவலை இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டாள் எனவே அவளுக்காக இந்த பாட்டை பாடுவதாக அவர் கூறினார். பாடி முடித்தவுடன் மேடைக்கு வந்த விஸ்வரூபிணியை கட்டிப்பிடித்துக் கொண்ட அவர் விஸ்வரூபிணியின் தாயாரின் மருத்துவ செலவிற்காக தன்னுடைய சேமிப்பிலிருந்து சிறிய தொகையையும் கொடுத்து உதவினார்.

தொடர்புடையவை  வீடு தேடி வந்து மிரட்டிய கோபி..! உன்னை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டேன்..! சவால் விட்ட பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

சேமித்த பணத்தை தோழியின் அம்மாவின் மருத்துவ செலவுக்கு கொடுத்த சிறுமி.! சூப்பர் சிங்கரில் நெகிழ்ச்சி.! 3
அனன்யாவின் இந்த செயலால் நடுவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போயினர். அனைவரும் எழுந்து நின்று அனன்யாவுக்காக கைத்தட்டினர். பின்னர் பேசிய விஸ்வரூபணி தன்னுடைய தந்தை தான் இத்தனை நாள் தனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது தனது தந்தையையும் மீறி தனக்கு அனன்யா நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார் என்று கண்ணீர் மல்க கூறினார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment