இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் புதிய படம் தான் விடுதலை. இந்த படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற முறையில் சண்டை காட்சிகளை எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் நாள்தோறும் தொடர்ந்து நடந்து வருகிறது. முறையான பாதுகாப்பு இல்லாமல் தற்போது கிரேன் அறுந்து விழுந்து மற்றொரு உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது. அந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் வண்டலூருக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடந்து வந்தது. அப்போது அங்கு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது. ட்ரெயின் மூலம் செல்வது போல் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டபோது திடீரென்று கிரேன் கயிறு அறுந்து விழுந்தது.

இதில் 30 அடி உயரத்திலிருந்து 59 வயதான சண்டை பயிற்சியான சுரேஷ் கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷை படப்பிடிப்பில் இருந்தவர்கள் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சுரேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர் அவரது உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தயாரிப்பாளரின் சொந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்ததால், காவல்துறையினரிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் அவருக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் எங்கள் சண்டை பயிற்சியாளர் இறந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. போதுமான பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் உதவிகள் அனைத்தும் இருந்த போதிலும் அவரது உயிரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

இது எங்கள் குழுவிற்கு மிகப் பெரிய இழப்பு. எங்கள் மனதில் இது நீங்காத வடுவாகவும் எப்பொழுதும் இருக்கும். சண்டை பயிற்சியாளர் சுரேஷின் குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், அவரது ஆன்மா இளைப்பாறட்டும் என்று அந்த நிறுவனம் தங்களது இரங்கல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. அந்த செய்தியை நீங்களும் காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Thanthi TV